முன்னுரையாடல்

இப்போ என்ன? திடீர்னு..

திடீர்னு எங்க.. மூனு நாளாவே, மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு..

ஓ...ஹோ...  பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் பாத்து inspire ஆகிட்டியோ.. ஹீ.. ஹீ..

இல்ல...! இருக்குமோ..? தெரியல.. definite ஆ இல்ல.. நமக்குன்னு ஒரு உலகம் இருக்கணும் ல. To keep our own madness alive..

ஓ.. ஓ....! இப்போ புடிச்சிட்டேன்.. ஆத்துகார்ட்ட  எந்த conversation ஆ இருந்தாலும் நீயே ஆரம்பிச்சு reply கு wait பண்ற.. அவருக்கு  ஆர்வமில்லை ன்னு உனக்கே ஒரு thought இருக்கு. அதான..?

அதுவும் ஒன்னும் புதிசில்லயே. இன்னும் 10 நாள்ல.., salary க்ரெடிட் ஆச்சா.. 2L  transfer பண்ணு ன்னு அவரே initiate பண்ணுவாரே..

ம்...க்கூம்.. ரொம்ப நல்ல மதிப்பீடுதான் போ.. ஆசானோட கசகஸ்தான் experience அவர்கிட்ட share பண்ணப்போ அவரோட genuine பதட்டத்த கண்ணால பாத்தியே.. அவருக்கும் ஆசானுக்கும் என்ன சம்பந்தம்..? உன்னோட regards மேல அவருக்கு இருக்க மரியாதை அது. நீயே அதை நிறைய தடவ பாத்திருக்க. அவரே சொன்ன மாதிரி அவர் ஒரு simple person.

இரு இரு.. என்ன ஓவரா போய்ட்டு இருக்கு. நாங்களாம் நாங்க ஹை regards வச்சிருந்த நபரோட எதாது ஒரு common whatsApp குரூப் ல வர நியூ இயர் விஷ் கே வருஷம் முழுசும் wait பண்ணிப் பழக்கப்பட்டவங்க... இதுக்குலாமா அசந்துறுவோம்..?!

அதும் சரிதான்.. அப்றம் என்னதான் காரணம்..? எப்போம்போல momentary frustration எதாதா? வாய்ப்பில்லையே.. உன் வீட்லதான இருக்க? அவ்ளோ ஸ்மரணைலாம் வராதே..!  சரி, என்னத்த எழுதப் போற?  ரெண்டாங் க்ளாஸ் ல, நீ பார்த்த  மொதோ புயல பத்தி அடுத்த நாள் காலைல தெருவே மழைல நனஞ்சிகிட்டே புயல் சேத்த குப்பையெல்லம் சுத்தம் பண்ணிட்ருந்தப்போ ரெனால்ட்ஸ் பேனாவால பெரியக்காவோட நோட்டுல எழுத முயற்சி பண்ணியே, எழுதி முடிச்சியா?

அதொன்னும் புயல் பத்தின கதை இல்ல. விவேக் ஆயா வோட ஆளுமை ய நா realize பண்ணின incident பத்தின கதை.

ஆஹான்.. பூவ.., பூ ன்னும் சொல்லலாம்.. புஷ்பம் ன்னும் சொல்லலாம்..

அந்த கதை எனக்கே எனக்காக என் மனசில இருக்கு.

அதே தான்.. எழுதி முடிக்கலங்கரத இப்டியும் சொல்லலாம்.

அஞ்சாங் கிளாஸ்ல ரேகா ன்னு ஒரு கதை எழுதினேன் ல

அதான் நவிதாவும் R . கல்பனாவும் எழுதுன ரம்யா கதைகூட withstand பண்ண முடியல , கதை எழுத சொன்ன ரேணுகா டீச்சர்க்கு கூட அந்த ரேகா அவங்கதான்னு தெரியல. ரம்யா கதைய எல்லார்க்கும் படிச்சுக்காட்டி கதை போட்டிக்கு அனுப்பிட்டு ரேகா கதைய உன்ட்டயே கொடுத்தாங்க.

அது ரேணுகாதேவி ங்கற அவங்க பேர ரேகாதேவி ன்னு டுஸ்ட்  பண்ணி அதையும் சுருக்கி ரேகா ன்னு வச்சேன் ல அதனால் அவங்கலாலேயே கண்டுபிடிக்க முடியாம போயிடுச்சு. அதோட என் தலை எழுத்துல்ல நல்லா இருந்துச்சு. கையெழுத்த எப்டி படிக்கிறதாம்.. நல்லாருக்குனு சொல்லி 8 மார்க் போட்டாங்க.. இப்போ டிஜிட்டல் மீடியா இருக்கு.

ஆமா.. ரம்யா கதைக்குகூட 10 க்கு 10 மார்க் போட்டாங்க. அதவிடு.. எட்டாம் கிளாஸ்ல நாய் பத்தி எழுதினியே அத..?

அதான் G S டீச்சர் அகமகிழ்ந்து என் பெயரையே செல்லப்பிராணி ன்னு establish பண்ற அளவுக்கு சிறப்பா எழுதினேன் ல..

இல்லையே, எழாங்லாஸ்லே உன்னை குப்புற தள்ளி முதுகிலே கடிச்சு வயிற்றிலே 7 ஊசி போட வச்சதாலே நாய் மேல உனக்கு இருந்த பயம், நாய் ஓனர் மேல வந்த வெருப்பு லாம் பத்தி சீரிஸ் எழுத ஆரம்பிச்சியே.

அதான் G S டீச்சர் மெடிக்கல் லீவ் ல போய்ட்டாங்கல்ல..

அப்றம் 4 வருஷம் TVR நினைவு சிறுகதை போட்டிக்கு எழுதினியே.

அதெல்லாம் படிக்க எனக்கே புடிக்கல. அதனால தூக்கிப்போட்டுட்டேன். காலேஜ் ல எழுதின எரும கதை, rope dancer கதை எல்லாம் மறந்து போச்சா? நாங்களும் எழுதுவோம்.

அதுக்கப்பறம் தான.., உன்னோட எழுத்துல தரமே இல்ல. இனிமே எழுதவே கூடாது ன்னும் decide பண்ணே.. Literary club ல எவ்ளோ பெரிய வாசகர்லாம் humble ஆ வாசகராவே இருக்க விரும்பறாங்க.. உனக்கென்ன.. 

சை.. ஒரு மனுஷி ஒரு சீரிஸ் எழுதணும் ன்னு சீரியஸா நினைச்சிடக்கூடாதே..

முதல்ல சேர்ந்தாப்பல 3 மணி நேரம் தூங்க தெரியுதான்னு பாருங்க மேடம்..!

Wake up its 4.30... 

Comments