Posts

Showing posts from January, 2025

மாசற்ற ஜோதி

நடந்து செல்லும் தூரம்தான் ஞானசபை நான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்து. எம் ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ராமலிங்கம் இருப்பர். எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்ட வயதில் பிறர் உதவியின்றி முழுமையாய்ப் படித்த முதல் வாழ்க்கை வரலாறு அவருடையதே. அன்றும் அழுதுகொண்டே தான் படித்தேன். என் சகோதரி எப்போதும் அதி விரைவாக படிக்கக்கூடியவர். எங்கள் அன்னை தினசரி மற்றும் வார இதழ்களில் வரும் ராசி பலன்,  ஆன்மிக கதைகள்,  ஸ்தல வரலாறு போன்ற அவருக்கு ஆர்வமூட்டுபவற்றை சகோதரியையோ சகோதரி இல்லாத சமயங்களில் என்னையோ வாய் விட்டு வாசிக்க சொல்லி கேட்பார்.  ஐந்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாளில் வீட்டருகில் வசித்த வயதான பாட்டிகள், சிறுமிகள்  மற்றும்  எம் அன்னையுடன் ஞானசபை அருகில் இருந்த வள்ளலார் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அறைக்கு பெரியவர்களுக்கு  25 பைசா நுழைவு கட்டணம், குழந்தைகளுக்கு இனாம் என்று  1 ரூபாய் 25 பைசா கட்டணம் செலுத்தி எல்லோரும் உள்ளே சென்றோம். வள்ளலாரின் வாழ்வில் பிறப்பு முதல் ஜோதியுடன் கலந்தது வரை நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை படங்களாக வரைந்து ஒவ்வொரு படத்திற...

BOOK FAIR 2024

எதிர்பாராமல் கிடைத்தது புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு. நம் தன்னாட்சி நிலையை இழந்தது முதல் வருடா வருடம் திட்டமிடுதலும் அனுமதி கோருதலும் மட்டும் நிகழும். பிறகு அதி முக்கிய காரியங்கள் எல்லா நாட்களையும் நிறைத்து, கண்காட்சியின் கடைசி நாள்வரை நேரமற்று போகும்.  சமீபத்தில் மரியாதைக்குறிய ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு ஒன்றை வாட்ஸ்ஆப்பில் துவக்கி அதில் என்னையும் இணைத்திருந்தார். 350 க்கும் மேற்பட்டோர் அக்குழுவில் ஏற்கனவே இணைந்திருந்தார்கள். எங்கள் ஊரின் பள்ளி கல்வி பெற்ற முந்தைய தலைமுறை மொத்தமும் அதே பள்ளியில் பயின்றிருந்ததால் நம் உறவினர் பெரும்பாலோர் முன்னாள் மாணவர் குழுவில் மாணவராகவோ அல்லது அதே பள்ளியில் பயிற்றும்வித்து ஆசிரியராகவோ குழுவுடன் இணைக்கப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததால் , அக்குழுவில் நாம் மூச்சே விடுவதில்லை. நாம் இணைக்கப்பட்ட அதே நாளில் புதிதாக இணைந்தோர் சிலர் தம்மைப்பற்றிய அறிமுக குறிப்பு அனுப்பியிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஒரு சுட்டியைப் பகிர்ந்திருக்க நாம் அதை சொடுக்கி படிக்க அவர் சுவாரஸ்யமாக எழுதும் வழக்கமுள...
சிலம்பின் இசைத்தமிழ்   1. இசையோன் யாழும், குழலும், சீரும், மிடறும், தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி, கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும், பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை - வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையோன் - தானும் - 2. முத்தமிழ்ப் புலவன் இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின் நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து, இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு, அசையா மரபின் அது பட வைத்து, மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து, நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் - 3. தண்ணுமை ஆசிரியன் ஆடல், பாடல், இசையே, தமிழே, பண்ணே, பாணி, தூக்கே,முடமே, தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு, வார நிலத்தை வாங்குபு வாங்கி, வாங்கிய வாரத்து, யாழும், குழலும், ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப, கூர் உகிர்க் கரணம் குறி அறிந...