நீரோட்டமும் நினைவோட்டமும்
கொட்டும் ஷவரிலிந்து தோள்பட்டையில் சில்லென்று இறங்கிய நீர் கணுக்கால்கள் மற்றும் மணிக்கட்டுகள் வழியாக சூடாக வெளியேறிக்கொண்டு இருந்ததை உணர்ந்தபோது தோன்றியது ஆராத்யா குறிப்பிட்டது இதுதானோ. அலுவலக நண்பர்களுடன் அவரைச் சந்திக்க சென்ற போது அவர் பேசியதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அந்த சந்திப்பு அவர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவார் என்பது பற்றி அறியத்தான். ஆனால் சூழலின் வலி எனது சிந்தையையும் முடக்கியிருந்தது. "ஹேட் எ ஹாட் ஷவர் ?" ஒரு குறும்பு சிரிப்புடன் கேட்டார். எதற்கு என்று புரியாமல் திரும்பி பார்த்தேன். "ஓ , கோல்ட் ஷவரா ?" ஆமாம் என்பதாய்த் தலையாட்டி வைத்தேன். அவரே தொடர்ந்தார். "விபத்துக்கு பின் நினைவு மீண்டதிலிருந்து, கழுத்துக்கு கீழ் எனக்கு ஹாட், கோல்ட் எல்லாமே ஒன்றுதான். மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு அற்றுவிட்டது. அதற்காக, உடலில் உள்ள திசுக்கள் அவற்றின் கடமைகளை ஆற்ற தவறுவதெல்லாம் இல்லை. உருவாகும், வளரும், உருவாக்கும், சிதையும்.. மூளையின் எந்த பங்களிப்பும் இன்றி" என் நினைவை மீட்டு நிகழ்தளத்தில் தளையிட்டேன். நீர் சீராகக் கொட்டிகொண்ட...