Posts

 இரவு பத்தரை மணிக்கு மாவு கடையில் 100 ரூபாய் மின் பரிவர்த்தனை செய்த போதுதான் கவனித்தேன். gpay செயலியில் புதிதாக  20 ரூபாய் பரிவர்த்தனை பற்றி அறிவிப்பு இருந்ததை. 20 ரூபாய்க்கு என்ன செலவு என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடாமல் போக, அப்போதுதான் கண்டேன் அது செலவு பதிவு அல்ல வரவு என்பதை. இணையாக டிஜிட்டல் மோசடிகள் பற்றி நாம் கேள்விப்பட்டவை எல்லாம் நினைவுக்கு வர, சீரியல் கில்லர்களைக் கொள்ளும் சீரியல் கில்லர் போல , ஸ்கேமர்களை  ஸ்கேம் செய்யும் ஸ்கேமராக மனதில் கற்பனைகளை விரித்துக்கொண்டு பத்து பதினைந்து அடிகள் கடந்திருப்பேன். செயலி குறிப்பிட்ட பெயர் சட்டென்று தட்டுப்பட இன்று புதிதாக பள்ளியில் நம் வகுப்புக்கு மட்டுமான  வாட்ஸாப் குழுமத்தில் இணைய அழைப்பு வர , என்னுடைய 3 தோழிகளின் தொடர்பு கிடைக்குமோ என்ற ஆவலில் குழுவில் இணைந்ததும் , 11, 12 வகுப்புகளில் உடன் பயின்ற ஒரு மாணவரின் பெயர்தான் gpay இன்று குறிப்பிட்ட பரிவர்த்தனையை செய்தது என்பதும் புரிந்தது. தொண்ணூற்று எட்டோ ஒன்பதோ , ராஜ்யபுரஸ்கார் தேர்வுக்காக பள்ளியிலிருந்து 5 சாரணியர் , 5 சாரணர் தேர்வு செய்யப்பட்டு முசிறியில் நடைபெற்ற பயிற்...
 விராட் - விராட்ணி ஆனதுபோல, ஆரோவில்லில் நமது வீட்டருகில் அர்கோஸ் - அர்கோஸியானார். எந்த செயலும் ஆற்றாத எனக்கு இந்த ஹாட் டாபிக் பற்றி பேச நியாயப்படி உரிமையில்லை. அர்கோஸி பூர்வாஸ்ரமத்தில் என்ன பெயரிட்டு வழங்கப்பட்டார் என்று எங்கள் எவருக்கும் தெரியாது. ஆரோவில்லில்   உள்ளூர்வாசி ஒருவருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் இரு வெளிநாட்டு பெண்களால் நடத்தப்பட்டு, இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த   கஃபேயில் சுற்றுசுவர்களுக்குள்ளேயே  வைத்திருந்ததால்  வெறியுடன் வளர்ந்தவர். நாள் முழுவதும் பங்களாவின் பால்கனியில் நின்று குறைத்து கொண்டிருப்பவராக மட்டும் அறியப்பட்டிருந்தார். 2019 - 2020 வாக்கில், பெண்டிர் இருவருக்கும் ஏற்பட்ட முரண் காரணமாக ஒருவர் பிரிந்து செல்ல சில நாட்களுக்கு பிறகு மற்றவரும் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு,  பங்களாவைப் பூட்டி சாவியை சுற்றுச்சுவர் மதில் மீது வைத்து அதை புகைப்படம் எடுத்து  விமானத்திற்கு நேரமாகிவிட்டதாக உரிமையாளருக்கு வாட்ஸாப்பில் செய்தியை புகைப்படத்துடன் அனுப்பிவிட்டு  கிளம்பிவிட்டார் . உரிமையாளர் பணியாளர் ஒருவர...

மாசற்ற ஜோதி

நடந்து செல்லும் தூரம்தான் ஞானசபை நான் பிறந்து வளர்ந்த வீட்டிலிருந்து. எம் ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ராமலிங்கம் இருப்பர். எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்ட வயதில் பிறர் உதவியின்றி முழுமையாய்ப் படித்த முதல் வாழ்க்கை வரலாறு அவருடையதே. அன்றும் அழுதுகொண்டே தான் படித்தேன். என் சகோதரி எப்போதும் அதி விரைவாக படிக்கக்கூடியவர். எங்கள் அன்னை தினசரி மற்றும் வார இதழ்களில் வரும் ராசி பலன்,  ஆன்மிக கதைகள்,  ஸ்தல வரலாறு போன்ற அவருக்கு ஆர்வமூட்டுபவற்றை சகோதரியையோ சகோதரி இல்லாத சமயங்களில் என்னையோ வாய் விட்டு வாசிக்க சொல்லி கேட்பார்.  ஐந்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாளில் வீட்டருகில் வசித்த வயதான பாட்டிகள், சிறுமிகள்  மற்றும்  எம் அன்னையுடன் ஞானசபை அருகில் இருந்த வள்ளலார் வாழ்க்கை வரலாறு கண்காட்சி அறைக்கு பெரியவர்களுக்கு  25 பைசா நுழைவு கட்டணம், குழந்தைகளுக்கு இனாம் என்று  1 ரூபாய் 25 பைசா கட்டணம் செலுத்தி எல்லோரும் உள்ளே சென்றோம். வள்ளலாரின் வாழ்வில் பிறப்பு முதல் ஜோதியுடன் கலந்தது வரை நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை படங்களாக வரைந்து ஒவ்வொரு படத்திற...

BOOK FAIR 2024

எதிர்பாராமல் கிடைத்தது புத்தக கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு. நம் தன்னாட்சி நிலையை இழந்தது முதல் வருடா வருடம் திட்டமிடுதலும் அனுமதி கோருதலும் மட்டும் நிகழும். பிறகு அதி முக்கிய காரியங்கள் எல்லா நாட்களையும் நிறைத்து, கண்காட்சியின் கடைசி நாள்வரை நேரமற்று போகும்.  சமீபத்தில் மரியாதைக்குறிய ஆசிரியர் ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு ஒன்றை வாட்ஸ்ஆப்பில் துவக்கி அதில் என்னையும் இணைத்திருந்தார். 350 க்கும் மேற்பட்டோர் அக்குழுவில் ஏற்கனவே இணைந்திருந்தார்கள். எங்கள் ஊரின் பள்ளி கல்வி பெற்ற முந்தைய தலைமுறை மொத்தமும் அதே பள்ளியில் பயின்றிருந்ததால் நம் உறவினர் பெரும்பாலோர் முன்னாள் மாணவர் குழுவில் மாணவராகவோ அல்லது அதே பள்ளியில் பயிற்றும்வித்து ஆசிரியராகவோ குழுவுடன் இணைக்கப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததால் , அக்குழுவில் நாம் மூச்சே விடுவதில்லை. நாம் இணைக்கப்பட்ட அதே நாளில் புதிதாக இணைந்தோர் சிலர் தம்மைப்பற்றிய அறிமுக குறிப்பு அனுப்பியிருந்தனர். அவர்களுள் ஒருவர் ஒரு சுட்டியைப் பகிர்ந்திருக்க நாம் அதை சொடுக்கி படிக்க அவர் சுவாரஸ்யமாக எழுதும் வழக்கமுள...
சிலம்பின் இசைத்தமிழ்   1. இசையோன் யாழும், குழலும், சீரும், மிடறும், தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து, வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி, தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி, கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும், பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை - வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையோன் - தானும் - 2. முத்தமிழ்ப் புலவன் இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி, வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின் நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து, இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு, அசையா மரபின் அது பட வைத்து, மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து, நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் - 3. தண்ணுமை ஆசிரியன் ஆடல், பாடல், இசையே, தமிழே, பண்ணே, பாணி, தூக்கே,முடமே, தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து, கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு, வார நிலத்தை வாங்குபு வாங்கி, வாங்கிய வாரத்து, யாழும், குழலும், ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப, கூர் உகிர்க் கரணம் குறி அறிந...

நீரோட்டமும் நினைவோட்டமும்

கொட்டும் ஷவரிலிந்து தோள்பட்டையில் சில்லென்று இறங்கிய நீர் கணுக்கால்கள் மற்றும் மணிக்கட்டுகள்  வழியாக சூடாக வெளியேறிக்கொண்டு இருந்ததை உணர்ந்தபோது தோன்றியது ஆராத்யா குறிப்பிட்டது இதுதானோ. அலுவலக நண்பர்களுடன் அவரைச் சந்திக்க சென்ற போது அவர் பேசியதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.  அந்த சந்திப்பு அவர் எப்போது மீண்டும் பணிக்கு திரும்புவார் என்பது பற்றி அறியத்தான். ஆனால் சூழலின் வலி எனது சிந்தையையும் முடக்கியிருந்தது.  "ஹேட் எ ஹாட் ஷவர் ?" ஒரு குறும்பு சிரிப்புடன்  கேட்டார். எதற்கு என்று புரியாமல் திரும்பி பார்த்தேன். "ஓ , கோல்ட் ஷவரா ?" ஆமாம் என்பதாய்த் தலையாட்டி வைத்தேன்.  அவரே தொடர்ந்தார். "விபத்துக்கு பின் நினைவு மீண்டதிலிருந்து, கழுத்துக்கு கீழ் எனக்கு ஹாட், கோல்ட் எல்லாமே ஒன்றுதான். மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு அற்றுவிட்டது. அதற்காக, உடலில் உள்ள திசுக்கள் அவற்றின் கடமைகளை ஆற்ற தவறுவதெல்லாம் இல்லை. உருவாகும், வளரும், உருவாக்கும், சிதையும்..  மூளையின்  எந்த பங்களிப்பும் இன்றி"  என் நினைவை மீட்டு நிகழ்தளத்தில் தளையிட்டேன்.  நீர் சீராகக் கொட்டிகொண்ட...

மெடிக்கல் ஆஃபீசர்

"ஆஃபீசர் னா அவர மாதிரி இருக்கனும். அவர் ஒன்னு சொன்னா அப்பீலே கிடையாது. புது பேட்ச் ஜாயின் பண்றப்போ ஒவ்வொருத்தரும் பேர், நம்பர்,  ஊர் மட்டும் 6 செகண்ட்ல சொல்லுவாங்க. ஒருமுறைதான் கேட்பார். பின்னால எத்தன வருஷம் கழிச்சு 400 அடி, 400 கஜம்னு கூட சொல்லலாம் தூரத்துல போனாலும் சரியாய் பேர் நம்பர் சொல்லி கூப்புடுவார். கண் அவ்ளோ ஷார்ப். மெமோரியும்தான். ஒவ்வொருத்தரோட 7 டிஜிட் நம்பரும் ஞாபகத்துல இருக்கும். எதுக்கு கூப்பிடறாரோ னு பயந்துட்டு வருவான். ப்ரோமோஷன் ஆயிடுச்சா னு கேட்பார். இல்லேனு சொன்னா ஸ்லிப் கொடுத்து இவர பாரும்பார். பாத்துட்டு ப்ரோமோஷன் லெட்டரோட வருவான்." அவர்  சொன்னார். இரண்டாண்டுகளுக்கு முன் அவருடைய சதாபிஷேகத்தில் பார்த்ததற்கு சற்று பூசினாற்போல இருந்தார். 60 கிலோ மீட்டர் கார் பயணம் கால்களை வீங்க செய்திருந்தது. பசுந்தயிரில் மெல்லிய ஆடை கட்டியது போல கண்கள் குழம்பி இருந்தன. பத்து அடி தள்ளி என்னவோ கிடக்க அதைச் சுற்றி எவையோ மொய்த்தன. கண்ணாடி அணிந்திருந்தும் என்னவென்று கண்டுணர இயலவில்லை. கருத்து எப்போதுமே வாய்ப்புள்ள எல்லாவற்றையும் இருக்கலாம் என்று சொல்லுமே தவிர ஒருநாளும் இதுதான் என...