இரவு பத்தரை மணிக்கு மாவு கடையில் 100 ரூபாய் மின் பரிவர்த்தனை செய்த போதுதான் கவனித்தேன். gpay செயலியில் புதிதாக 20 ரூபாய் பரிவர்த்தனை பற்றி அறிவிப்பு இருந்ததை. 20 ரூபாய்க்கு என்ன செலவு என்று எவ்வளவு யோசித்தும் பிடிபடாமல் போக, அப்போதுதான் கண்டேன் அது செலவு பதிவு அல்ல வரவு என்பதை. இணையாக டிஜிட்டல் மோசடிகள் பற்றி நாம் கேள்விப்பட்டவை எல்லாம் நினைவுக்கு வர, சீரியல் கில்லர்களைக் கொள்ளும் சீரியல் கில்லர் போல , ஸ்கேமர்களை ஸ்கேம் செய்யும் ஸ்கேமராக மனதில் கற்பனைகளை விரித்துக்கொண்டு பத்து பதினைந்து அடிகள் கடந்திருப்பேன். செயலி குறிப்பிட்ட பெயர் சட்டென்று தட்டுப்பட இன்று புதிதாக பள்ளியில் நம் வகுப்புக்கு மட்டுமான வாட்ஸாப் குழுமத்தில் இணைய அழைப்பு வர , என்னுடைய 3 தோழிகளின் தொடர்பு கிடைக்குமோ என்ற ஆவலில் குழுவில் இணைந்ததும் , 11, 12 வகுப்புகளில் உடன் பயின்ற ஒரு மாணவரின் பெயர்தான் gpay இன்று குறிப்பிட்ட பரிவர்த்தனையை செய்தது என்பதும் புரிந்தது. தொண்ணூற்று எட்டோ ஒன்பதோ , ராஜ்யபுரஸ்கார் தேர்வுக்காக பள்ளியிலிருந்து 5 சாரணியர் , 5 சாரணர் தேர்வு செய்யப்பட்டு முசிறியில் நடைபெற்ற பயிற்...
Posts
Showing posts from February, 2026