விராட் - விராட்ணி ஆனதுபோல, ஆரோவில்லில் நமது வீட்டருகில் அர்கோஸ் - அர்கோஸியானார். எந்த செயலும் ஆற்றாத எனக்கு இந்த ஹாட் டாபிக் பற்றி பேச நியாயப்படி உரிமையில்லை. அர்கோஸி பூர்வாஸ்ரமத்தில் என்ன பெயரிட்டு வழங்கப்பட்டார் என்று எங்கள் எவருக்கும் தெரியாது. ஆரோவில்லில் உள்ளூர்வாசி ஒருவருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் இரு வெளிநாட்டு பெண்களால் நடத்தப்பட்டு, இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த கஃபேயில் சுற்றுசுவர்களுக்குள்ளேயே வைத்திருந்ததால் வெறியுடன் வளர்ந்தவர். நாள் முழுவதும் பங்களாவின் பால்கனியில் நின்று குறைத்து கொண்டிருப்பவராக மட்டும் அறியப்பட்டிருந்தார். 2019 - 2020 வாக்கில், பெண்டிர் இருவருக்கும் ஏற்பட்ட முரண் காரணமாக ஒருவர் பிரிந்து செல்ல சில நாட்களுக்கு பிறகு மற்றவரும் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு, பங்களாவைப் பூட்டி சாவியை சுற்றுச்சுவர் மதில் மீது வைத்து அதை புகைப்படம் எடுத்து விமானத்திற்கு நேரமாகிவிட்டதாக உரிமையாளருக்கு வாட்ஸாப்பில் செய்தியை புகைப்படத்துடன் அனுப்பிவிட்டு கிளம்பிவிட்டார் . உரிமையாளர் பணியாளர் ஒருவர...
Posts
Showing posts from August, 2025