விராட் - விராட்ணி ஆனதுபோல, ஆரோவில்லில் நமது வீட்டருகில் அர்கோஸ் - அர்கோஸியானார். எந்த செயலும் ஆற்றாத எனக்கு இந்த ஹாட் டாபிக் பற்றி பேச நியாயப்படி உரிமையில்லை. அர்கோஸி பூர்வாஸ்ரமத்தில் என்ன பெயரிட்டு வழங்கப்பட்டார் என்று எங்கள் எவருக்கும் தெரியாது. ஆரோவில்லில்   உள்ளூர்வாசி ஒருவருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் இரு வெளிநாட்டு பெண்களால் நடத்தப்பட்டு, இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த   கஃபேயில் சுற்றுசுவர்களுக்குள்ளேயே  வைத்திருந்ததால்  வெறியுடன் வளர்ந்தவர். நாள் முழுவதும் பங்களாவின் பால்கனியில் நின்று குறைத்து கொண்டிருப்பவராக மட்டும் அறியப்பட்டிருந்தார். 2019 - 2020 வாக்கில், பெண்டிர் இருவருக்கும் ஏற்பட்ட முரண் காரணமாக ஒருவர் பிரிந்து செல்ல சில நாட்களுக்கு பிறகு மற்றவரும் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு,  பங்களாவைப் பூட்டி சாவியை சுற்றுச்சுவர் மதில் மீது வைத்து அதை புகைப்படம் எடுத்து  விமானத்திற்கு நேரமாகிவிட்டதாக உரிமையாளருக்கு வாட்ஸாப்பில் செய்தியை புகைப்படத்துடன் அனுப்பிவிட்டு  கிளம்பிவிட்டார் . உரிமையாளர் பணியாளர் ஒருவரை வரும் வழியில் சாவியை எடுத்துக்கொண்டுவந்து தரும்படி கோர, எவரும் வீட்டினுள் அடைபட்டிருந்த நாயை கவனிக்கவில்லை .  4 / 5 நாட்கள் போல அன்னம் தண்ணீர் இன்றி நாள் முழுவதும் அழுது புலம்பி வலிமை குன்றி சாகும் தருவாயில் இருந்தவர்,  என் அன்னையைக்காண வந்த சகோதரியின் கவனத்தில் உரைக்க அவர் தலையீட்டால் மீட்கப்பட்டார்.  அதன்பிறகுதான் அவர் எவ்வளவு நட்பு பாராட்டுகிறவர் என்பதை  உணர நேர்ந்தது. ஆணா பெண்ணா என்று கூட யோசிக்காமல் அவசரமாக Argos என பேரிடப்பட்டு இரு வாரங்களுக்கு பின் வேறொரு பங்களா நாயாட்டி இது பெண்ணென்று சொல்ல அர்கோஸி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார் . 

அவர்தாம் அடுத்த மூன்று நான்கு மாதங்களிலிருந்து இன்றுவரை எங்கள் தெரு பாதுகாவலர்களின் மூதன்னை. ஒன்றரை ஆண்டுகளில்  நான்கைந்து முறை ஆறேழு குட்டிகள் வீதம் ஈன்று மிக பரிதாபமாக இருந்தார். கொரோனா காலம் . என்ன செய்வது யாரை அணுகுவது  என்று புரியாமலே சில மாதங்கள் செல்ல ஒரு வழியாக தன்னார்வளர் தோழி ஒருவர் உதவியுடன் dog shelter ரில் விட்டு விட்டு வந்தோம். அவர்கள் ஸ்டெரிலைஸ் செய்து சில மாதங்கள்  பாதுகாத்தனர். ஓராண்டு இருக்கும் , எனக்கு மணமாகி சென்னையில் வசிக்கத்தொடங்கி  இருந்தேன். அம்மா அர்கோஸி வந்திருப்பதாக சொன்னார் . அதற்கு யாரையும் அடையாளம் தெரியவில்லை பெரும்பாலும் எங்காவது தனியாக படுத்தே இருப்பதாக சொன்னார்.  பிறகு நான் ஆரோவில் சென்றபோது என்னிடம் அர்கோஸியின் டெஸ்ஸன்டன்ட்கள் ஒவ்வொருவராக வந்து  நலம் / நட்பு பாராட்டி செல்ல சிறிது நேரத்தில் அர்கோஸி வந்தார் .  மிக அமைதியாக என்னை விட்டு விலகாமல் எதுவும் உண்ணாமல் என் அருகிலேயேயிருந்தார். அன்று மாலை மிக பரிதாபமான குரலுடன் என் கண்ணோக்கி அழுதுகொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் அருகில் ஒரு வேப்பமரத்தடியில் படுத்திருந்தவர் பின்பு எழவே இல்லை .

பங்களா நாய்களும் நாயாட்டிகளும் தெரு நாய்கள் என்ன, மனிதர்களே பார்க்க எளிமையாக பலஹீனமாக தோற்றமளித்ததால் கேட்பாரில்லை அடித்துகொல்லலாம் என்றே வெறி கொண்டிருப்பார்கள். (இது அந்த 90% தனி சுய அனுபவ எண்ணமும்தான் ஆசுவாசமும் தான். சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ) 

நாயாட்டி - இந்த சொல்லுக்கும் நூறு நாற்காலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை . 

Comments

Popular posts from this blog

மெடிக்கல் ஆஃபீசர்

முன்னுரையாடல்

மாசற்ற ஜோதி