சிலம்பின் இசைத்தமிழ் 

1. இசையோன்


யாழும், குழலும், சீரும், மிடறும்,

தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்

இசைந்த பாடல் இசையுடன் படுத்து,

வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கி,

தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்து

தேசிகத் திருவின் ஓசை எல்லாம்

ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,

கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,

பகுதிப் பாடலும் கொளுத்தும் காலை -

வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்

அசையா மரபின் இசையோன் - தானும் -


2. முத்தமிழ்ப் புலவன்


இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறியத்

தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி,

வேத்து இயல், பொது இயல், என்று இரு திறத்தின்

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து,

இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,

அசையா மரபின் அது பட வைத்து,

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,

நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும் -


3. தண்ணுமை ஆசிரியன்


ஆடல், பாடல், இசையே, தமிழே,

பண்ணே, பாணி, தூக்கே,முடமே,

தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து,

கூடை நிலத்தைக் குறைவு இன்று மிகுத்து ஆங்கு,

வார நிலத்தை வாங்குபு வாங்கி,


வாங்கிய வாரத்து, யாழும், குழலும்,

ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப,

கூர் உகிர்க் கரணம் குறி அறிந்து சேர்த்தி,

ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை,

சித்திரக் கரணம் சிதைவு இன்று செலுத்தும்

அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும் -


4. குழலோன்


சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை

புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்

வர்த்தனை நான்கும் மயல் அறப் பெய்து, ஆங்கு,

ஏற்றிய குரல், இளி என்று இரு நரம்பின்


ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகி,

பண் அமை முழவின் கண் எறி அறிந்து,

தண்ணுமை முதல்வன் - தன்னொடும் பொருந்தி,

வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்து - ஆங்கு,

இசையோன் பாடிய இசையின் இயற்கை


வந்தது வளர்த்து, வருவது ஒற்றி,

இன்புற இயக்கி, இசைபட வைத்து,

வார நிலத்தைக் கேடு இன்று வளர்த்து, ஆங்கு

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக,

வழு இன்று இசைக்கும் குழலோன் - தானும் -


5. யாழ்ப் புலவன்


ஈர்-ஏழ் தொடுத்த செம் முறைக் கேள்வியின்

ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி,

வன்மையின் கிடந்த தார பாகமும்,

மென்மையின் கிடந்த குரலின் பாகமும்,

மெய்க் கிளை நரம்பில் கைக்கிளை கொள்ள,

கைக்கிளை ஒழிந்த பாகமும், பொற்பு உடைத்

தளராத் தாரம் விளரிக்கு ஈத்து,

கிளைவழிப் பட்டனள்; ஆங்கே, கிளையும்

தன் கிளை அழிவு கண்டு அவள்வயின் சேர,

ஏனை மகளிரும் கிளைவழிச் சேர,

மேலது உழையுளி, கீழது கைக்கிளை

வம்பு உறு மரபின் செம்பாலை ஆயது:

இறுதி ஆதி ஆக, ஆங்கு அவை

பெறு முறை வந்த பெற்றியின் நீங்காது,

படுமலை, செவ்வழி, பகர் அரும்பாலை என,

குரல் குரலாகத் தற்கிழமை திரிந்த பின்,

முன்னதன் வகையே முறைமையின் திரிந்து - ஆங்கு,

இளி முதலாகிய எதிர்படு கிழமையும்,

கோடி, விளரி, மேற்செம்பாலை என

நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்,

இணை நரம்பு உடையன அணைவுறக் கொண்டு - ஆங்கு,

யாழ் மேற்பாலை இட முறை மெலிய,

குழல்மேல் கோடி வல முறை மெலிய,

வலிவும், மெலிவும், சமனும், எல்லாம்

பொலியக் கோத்த புலமையோனுடன் -


 இசைக் கருவிகள் ஒலித்த முறை

1. ஆமந்திரிகை

குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்

தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப்

பின் வழி நின்றது முழவே; முழவொடு

கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை.


7. அந்தரக் கொட்டு


ஆமந்திரிகையோடு அந்தரம் இன்றி,

கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆகக்

கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி,

வந்த முறையின் வழிமுறை வழாமல்,

அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,


எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற இயற்றமிழ் உறுப்புகளோடு  சுருதி, சுரம், இராகம், தாளம் ஆகிய நான்கும் சேர்ந்து இசைத்தமிழ் உறுப்புகள் 9 ஆகின. 


சுருதி :

ஒலி. சுவரத்தைத் தொடங்குவதற்கு அடிப்படையான ஒலியமைப்பு ஆகும். பொதுவாக தம்பூராவால் மீட்டப்படுவது. சுதி என்றும் அறியப்படுவது. 


சுரம்: ஒற்றை ஒலிக்குறிப்பு. ஒவ்வொரு சுரமும், சுதியுடன் தொடர்புடைய ஒலிக்குறிப்பின் படிநிலையை  வரையறை செய்கிறது.


ராகம்: சுரம் மற்றும் சுரக்கோவைகளின் கலவை. வெவ்வேறு கலவை வெவ்வேறு ராகங்களை உருவாக்குகிறது.


தமிழ் செவ்விசை நிகழ்வில் இடம்பெறும் கலைஞர்கள், அவர்தம் கருவிகள் மற்றும் தகுதிகள்  


இசையோன் - இசை அமைப்பாளர் 

யாழ்  - கம்பிகருவி 

குழல் - காற்றுகருவி 

சீர் - தாள (மட்ட தாளம் & சாய்ப்பு  தாளம் ) மற்றும் பண் விதிமுறைகள் 

மிடறு - வாய்ப்பாட்டு 

தண்ணுமை - தோல்கருவி 

தேசிக திரு - தமிழ் செவ்விசை

தாளக் காலத்தின் நடை (இயக்கம்) -   முதல் நடை, வார நடை, கூடை நடை, திரள் நடை (முதலாம், இரண்டாம், மூன்றாம்,  நான்காம்  காலம்)

வரி - சாஹித்யம் 

முத்தமிழ் புலவன் - கவிஞர் 

தண்ணுமை ஆசிரியன் - மிருதங்க வித்வான்





 


Comments

Popular posts from this blog

மெடிக்கல் ஆஃபீசர்

முன்னுரையாடல்

மாசற்ற ஜோதி